AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
BJP

BJP

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

Read More

பிரதமர் மோடியின் சென்னை விசிட்.. மெட்ரோ பயணம் முதல் இளையராஜா மையம் வரை.. முழு பிளான் இதோ!

PM Modi Visit Tamil Nadu Details : பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11- ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், பிரதமர் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

காங்கிரஸுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது.. விஜய் முதுகில் குத்த எவ்வளவு நேரமாகும்… தவெகவை வச்சு செய்த தமிழிசை!

BJP Senior Leader Tamilisai Soundararajan : காங்கிரஸ் கட்சியுடன் யார் சேர்ந்தாலும் உருப்பட மாட்டார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார். அவர் யாரை கூறுகிறார் என்பதை விரிவாக பார்க்கலாம் .

தலைநகரில் பிரதமர் மோடியின் மாஸ் என்ட்ரி.. சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பிரம்மாண்ட ரோடு ஷோ.. அதிரப்போகும் சென்னை!

PM Modi Road Show In Chennai : சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11- ஆம் தேதி பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார் . இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர் .

எம்ஜிஆர், ஜெயலலிதா போல எனக்கும் திமுக தான் எதிரி… முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி பேச்சு!

CM Vijay Speech In Madhuranthakam : முன்னாள் முதல்வர்களான எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா போல எனக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் எதிரி என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு அ வர் தெரிவித்தார் .

திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்த காங்கிரஸ்.. பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.. நயினார் நாகேந்திரன் நாக்-அவுட் கேள்வி!

Nainar Nagendran Criticizes Congress : தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார் .

காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!

Congress Leader Manickam Tagore : காங்கிரஸ் கட்சி இல்லையெனில் தமிழக வெற்றி க் கழகம் இரண்டாக உ டைக்கப்பட்டு கதையை முடிக்கப்பட்டிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம். பி. பரபரப்பு கருத்தை தெரிவித்தார் .

அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran Condemned Congress Party : தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கு கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு… அமித் ஷா தலைமையிலான குழுவில் சிஎம் விஜய்க்கு முக்கிய பொறுப்பு.. என்ன அது!

South Indian CMs Conference Committee: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெரும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டு குழுவில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது என்ன பொறுப்பு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

7 மாதங்களுக்குப் பிறகு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் புதிய அணி.. யார் யாருக்கு என்ன பொறுப்பு?

புதிய தேசிய நிர்வாகக் குழுவை அமைப்பதில் பிராந்திய சமநிலைகள், அனுபவம், அமைப்பு ரீதியான திறன் மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மூத்த தலைவர்களுடன் புதிய தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் வெளிப்படுவதாகக் கூறப்படுகிறது.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!

Vanathi Srinivasan : பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். இதில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரூப் என்பவரை நியமித்து தேசிய தலைவர் நிதின் நபீன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .

திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..

“அரசியலில் எதிரி, நண்பர் என்று யாரும் கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம்; வரவேற்போம்” என திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்தும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

“விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!

புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 12 ஆண்டுகளில் புதுச்சேரியின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1.37 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து தோளோடு தோள் நிற்பதாக அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை: எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன! பரபரப்பு தகவல்கள்!

Tamilnadu MPs Meeting : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம். பி. க்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சிவப்பு + மஞ்சள் சேர்ந்தால் கிடைப்பது காவி.. தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin Criticized TVK Government: திராவிட கழகத்தின் இரு சக்கர வாகன பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த தமிழக வெற்றிக் கழக அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதில், சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி நிறம் வரும் என்று வினவினார்.

நாடாளுமன்றத்தில் பரபரப்பு.. நேருக்கு நேர் நின்று முழக்கமிட்ட ஆளும் – எதிர்க்கட்சி எம்பிக்கள்!!

Delhi Parliament protest NDA vs Opposition: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்திய வேளையில், ஆளும் கூட்டணி எம்பிக்களும் எதிரெதிரே நின்று போட்டாபோட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.